Home இந்தியா ஜப்பான் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு

ஜப்பான் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு

432
0
SHARE
Ad

manmohanடோக்கியோ, மே 28- ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் டோக்கியோவில் தொழில் அதிபர்களை சந்தித்தார். அதில் ஏராளமான தொழில் முனைவோரும், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்தியாவில் தொழில் தொடங்க வரும்படி ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார். மேலும் அவர் பேசியதாவது:-

இந்தியா-ஜப்பான் இடையே தற்போது ரூ.1 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது போதுமானது அல்ல. எனவே, ஜப்பான் தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.

#TamilSchoolmychoice

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே வரிவிதிப்பு மாறுபடுவதாகவும், அதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் தொழில் அதிபர்கள் தெரிவித்தனர். அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அதுபோன்ற தடைகள் சீரமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.