Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய உணவக சந்தை மதிப்பு 48 பில்லியன் அமெரிக்க டாலர்!

இந்திய உணவக சந்தை மதிப்பு 48 பில்லியன் அமெரிக்க டாலர்!

568
0
SHARE
Ad

Restaurant-in-India-Featureமும்பாய், மே 29 இந்தியாவில் உணவகங்களில் சாப்பிடும் கலாச்சாரம் பெருகி வருவதைத் தொடர்ந்து, இந்திய உணவக சந்தையின் மதிப்பு 48 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது என இந்திய தேசிய உணவகங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பல கோடி முதலீட்டில் இயங்கி வரும் இந்தியாவின் சினிமா சந்தை கூட 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அடங்கிவிடுமாம். ஆனால், வெளிப் பார்வைக்கு, சிறியதாக, சாதாரணமாகத் தெரியும் உணவக சந்தையின் மொத்த மதிப்பு மிகவும் அதிகம் என்பதோடு அது வேகமாக வளர்ந்து வரும் சந்தையுமாகும்.

தொலைத் தொடர்பு சந்தையை விட உணவக சந்தையின் மதிப்பு இந்தியாவில் அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

நகர்ப்புற மக்களின் வருமானம் அதிகரிப்பு, மாறிவரும் வாழ்க்கைக் கலாச்சாரம், உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடும் பழக்கம் போன்ற எல்லாம் சேர்ந்து உணவக சந்தையின் மதிப்பை பல மடங்காக உயர்த்தி விட்டன.

ஒழுங்குபடுத்தப்பட்ட உணவகங்களுக்கான சந்தையின் மதிப்பு தற்போது 13 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கின்றது. இது எதிர்வரும் 5 ஆண்டுகளில் 28 பில்லியன் அமெரிக்கக டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாதாரணமாக அமர்ந்து சாப்பிடும் உணவகங்கள், துரித சேவை உணவகங்கள் ஆகியவை 70 சதவீத சந்தையைக் கொண்டிருக்கின்றன. எஞ்சிய 12 சதவீத சந்தையை, மதுபான விடுதிகளும், கிளப்புகளும் பெற்றிருக்கின்றன.

காப்பி, தேநீர் மையங்கள் 8 சதவீத சந்தையைக் கொண்டிருக்கின்றன. உயர்தர ஆடம்பர உணவகங்களும், இனிப்புவகை, பதனப்படுத்தப்பட்ட உணவுகளைப் பரிமாறும் மற்ற வகை உணவகங்களும் மீதி சந்தையைக் கொண்டிருக்கின்றன.