சென்னை, மே. 31- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது. கே. கண்ணன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் க.தனசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கருணாநிதி பிறந்த நாளை 17-ந் தேதி கோயம்பேட்டில் சிறப்பாக கொண்டாட வேண்டும். இதில் 9 ஆயிரம் பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி மு.க. ஸ்டாலின் பேசுகிறார். 3-ந் தேதி காலையில் கலைஞர் நகர் பகுதி முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கவேண்டும். விருகம்பாக்கம் சேவா மந்திர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அறுசுவை உணவும், ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவியும், மதியம் 1.00 மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகில் ஏழை, எளிய மக்கள் 1000 பேருக்கு பிரியாணி வழங்குவது.
தென்சென்னை மாவட்ட கழக சார்பாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ள கலைஞர் 90-வது பிறந்த நாள் கூட்டத்திற்கு கலைஞர் நகர் பகுதி கழகத்தினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்பதோடு முன்னதாக நடைபெறும் தலைவர் கலைஞருக்கு வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் கலைஞர் நகர் பகுதி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டள்ள சோழா ஹோட்டலில் இருந்து மியூசிக் அகாடமி வரை கலைஞர் நகர் பகுதி கழகத்தினர் இரு வண்ணக் கொடி ஏந்தி மேளதாளம் முழுங்க வான வேடிக்கை விண்ணதிர சிறப்பாக வரவேற்வு அளிக்க வேண்டும்.