Home அரசியல் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஜசெக வுடன் இணைந்து பணியாற்றத் தயார் – வேதமூர்த்தி

இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஜசெக வுடன் இணைந்து பணியாற்றத் தயார் – வேதமூர்த்தி

428
0
SHARE
Ad

waytha

ஜோர்ஜ் டவுன், ஜூன் 1 – இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ஹிண்ட்ராப் இயக்கம் உருவாக்கிய ஐந்தாண்டு திட்டவரைவை, பினாங்கு மற்றும் நாடெங்கிலும் அமல்படுத்துவதில் ஜசெக வுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று துணை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய சமூகத்திற்காக ஜசெக வெளியிட்ட கேலாங் பாத்தா பிரகடனத்தையும், ஹிண்ட்ராப்பின் திட்ட அறிக்கையுடன் ஒருங்கிணைத்து ஒதுக்கப்பட்ட இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக போராடுவது குறித்து ஆராயுமாறு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் அவரது மகன் லிம் குவான் எங் ஆகியோரை வேதமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“கேலாங் பாத்தாவில் போட்டியிட்ட லிம் கிட் சியாங் வெற்றி பெற்றுவிட்டார். அதே போல் அவரது மகன் லிம் குவான் எங்கும் தேர்தலில் வெற்றி பெற்று பினாங்கில் இரண்டாவது முறையாக மக்கள் கூட்டணி ஆட்சியை நிலைப் படுத்திவிட்டார்.

இனி கேலாங் பாத்தாவில் இந்திய மக்களின் வளர்ச்சிக்காக அமல்படுத்திய பிரகடனத்தையும், ஹிண்ட்ராபின் திட்ட அறிக்கையையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் என்ன?” என்று வெதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய மக்களுக்காகப் போராட நினைக்கும் எந்த ஒரு நேர்மையான மற்றும் உண்மையான அரசு சாரா அமைப்பாக இருந்தாலும் சரி, தனி நபர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடன் ஒருங்கிணைந்து தான் போராடத் தயார் என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, ஹிண்ட்ராப் உருவாக்கிய திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு, 24 முறை பக்காத்தானை சந்தித்தும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்,  ஆனால் தேசிய முன்னணியுடன் சந்திப்பு நடைபெற்ற பிறகு பிரதமர் நஜிப் அதை ஏற்றுக் கொண்டார் என்றும் வேதமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.