Home அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை- வேதமூர்த்தி தகவல்

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை- வேதமூர்த்தி தகவல்

762
0
SHARE
Ad

கோலாலம்பூர்,பிப்.5- Waytha-Sliderஎதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை என்று ஹிண்ட்ராப்பின் தேசியத் தலைவர் வேதமூர்த்தி கோடி காட்டியுள்ளார்.

ஹிண்ட்ராப் என்பது மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டது. இது அரசியல் அமைப்பு இல்லை என்றாலும் நாங்கள் ஓர் அரசியல் இயக்கம் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை அரசியல் தலைவர்கள் கண்டு கொள்வதில்லை.

#TamilSchoolmychoice

 

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை

2008ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவரிடம் பேசியிருக்கிறேன். அவர்களிடமும் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.

இந்தியர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சித் தலைவர்கள் சரியாக அறிந்திருக்கவில்லை என்றே கூற வேண்டும். தோட்டத்தை விட்டு நம்மவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, அடையாள அட்டை இல்லாமல் நம்மவர்கள் தவித்தது உள்ளிட்ட சில பிரச்சினைகள் அவர்களுக்கு புதிதாகப்பட்டது.

மக்கள் பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் என்ற நாம் செயல்பட்டு வருகிறோம். அதனால் நம்பிக்கை இழந்து விட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் வேதமூர்த்தி தெளிவுப்படுத்தினார்.

நாடு திரும்பிய பின் தற்போது எதிர்க்கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன். 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சற்று அதிகமான அக்கறை செலுத்தி இருந்தாலும் 13ஆவது பொதுத்தேர்தலில் புத்ரா ஜெயாவை கைப்பற்றும் வாய்ப்பு எளிதாக அமைந்திருக்கும் என்றார்.

இதுவரை 12 பொதுத்தேர்தலை இந்திய மக்கள் சந்தித்து இருக்கிறார்கள். அதனால் இனி அவர்கள் அரசியல் தலைவர்களை நம்ப தயாராக இல்லை. அதனால் தான் ஹிண்ட்ராப்பை நாடி வருகின்றனர்.

நாங்கள் ஏழை இந்தியர்களை மட்டுமே பிரதிநிதித்து இயங்கி வருகிறோம். ஏழை இந்தியர்களுக்கு நாட்டை ஆளப்போவது யார் என்பது குறித்த கவலை இல்லை. அவர்களுக்கு அவர்களின் அன்றாட தேவைகளை பற்றிதான் கவலை. அதனால் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்  என்று வேதமூர்த்தி மேலும் கூறியுள்ளார்.

தேசிய முன்னணி, பக்காத்தான் ஆகிய இரு தரப்பினருமே ஹிண்ட்ராப் கேட்கும் பிரத்யேக திட்டங்களை அங்கீகரிக்காத பட்சத்தில், பொருளாதார திட்டங்களில் இந்தியர்களுக்கு  வாய்ப்பளிக்க முன்வந்தால் அவர்களை நாங்கள் நம்ப தயாராக இல்லை.

காரணம் இன, பேதம் பார்க்காமல் ஏழ்மையை ஒழிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை 1970ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுநாள் வரையில் 1.15 ட்ரில்லியன் ரிங்கிட் வரை அந்த நோக்கத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் எத்தனை இந்தியர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை.  ஒரு சமூகம் பின்தங்கி இருந்தால் அவர்களுக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.  வெறும் வெற்று வாக்குறுதிகள் மட்டும் போதாது.

நாம் நம்பி கெட்டது போதும். இப்போது தைரியமாக முன்வந்து நமக்கென ஒரு சிறப்பு திட்டம் தேவை என்பதை உறுதியாக கூற வேண்டும். இது நமது உரிமை என்று மலேசிய நண்பனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் மேற்கண்டவாறு வேதமூர்த்தி கூறினார்.