Home நாடு சட்டத்திற்குப் புறம்பில்லாத வகையில் எதிர்கட்சியினர் பேரணி நடத்தலாம் – சாஹிட் கருத்து

சட்டத்திற்குப் புறம்பில்லாத வகையில் எதிர்கட்சியினர் பேரணி நடத்தலாம் – சாஹிட் கருத்து

548
0
SHARE
Ad

Kelana-Jaya-Feature

கோலாலம்பூர், ஜூன் 4 – தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்கட்சியினர் மேற்கொள்ளும் ‘கறுப்பு 505’ அமைதிப்பேரணி சட்டத்திற்குப் புறம்பில்லாதவகையில் அமைதியான முறையில் நடைபெறுவதாக இருந்தால் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அதோடு அமைதிப்பேரணி குறித்து காவல்துறையினருக்கு 10 நாட்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும் மற்றும் பேரணி எந்த இடத்தில் நடத்தப்படுகிறதோ அந்த இடத்தின் உரிமையாளரிடமிருந்து எழுத்து வழி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் ஹமீடி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

‘கறுப்பு 505’ அமைதிப்பேரணி வருகிற ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் கோலாலம்பூர் நடைபெறவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோத்தா பாருவில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் எதிர்கட்சியினரின் பேரணி குறித்து காவல்துறைக்கு 10 நாட்களுக்கு முன்னதாகத் தகவல் தெரிவிக்காத காரணத்தில் அதில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோத்தா பாரு காவல்துறை அதிகாரி இட்ரிஸ் அப்துல் ரபார் கேட்டுக்கொண்டார்.