Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குச்சீட்டுக்கள் 100 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டன – ரபிஸி

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குச்சீட்டுக்கள் 100 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டன – ரபிஸி

739
0
SHARE
Ad

Rafizi Ramliகோலாலம்பூர், ஜூன் 5 – பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணியின் வெற்றிக்காக, அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குகளை வாங்கியதாக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அதுபற்றி பொதுத்தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக மே மாதம் 4 ஆம் தேதி காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரபிஸி, சம்பந்தப்பட்ட அதிகாரியின் காவல்துறை புகார் அறிக்கையின் பிரதிகளை அளித்தார்.

#TamilSchoolmychoice

அந்த புகார் அறிக்கையில் வாக்குச்சீட்டுக்கள் விற்கப்பட்டதாக தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

“வாக்குச்சீட்டுக்கள் ஒவ்வொன்றும் 100 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தநாள் நான்கு அதிகாரிகள் தங்களது வாக்குச்சீட்டுக்களைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் திரும்பத் தரப்பட்ட வாக்குச்சீட்டுக்களில் அடையாளம் இடப்பட்டிருந்தது” என்று ரபிஸி தெரிவித்துள்ளார்.