Home அரசியல் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் வாய்திறக்க மறுத்தார் உதயக்குமார்

தேச நிந்தனைக் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் வாய்திறக்க மறுத்தார் உதயக்குமார்

572
0
SHARE
Ad

HINDRAFகோலாலம்பூர், ஜூன் 5 –  தன் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைக்காக, இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான ஹிண்ட்ராப் நிறுவனர் பி.உதயக்குமார், தனக்குக் கொடுகப்பட்ட இரு வாய்ப்புகளிலும் மௌனம் காத்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதிபதி அகமட் சம்ஸானி முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், தனது பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைக்க உதயக்குமாருக்கு இரண்டு முறை வாய்ப்பளிக்கப்பட்டும் அவர் மௌனம் காத்தார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் இந்திய சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் இனவாதக் கொள்கைகளை எதிர்த்தும், இவ்வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தான் மௌனம் காப்பதாக நீதிமன்றத்தில் உதயக்குமார் தெரிவித்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 வருட சிறை தண்டனையோ அல்லது 5000 ரிங்கிட் அபராதமோ அல்லது இவை இரண்டுமோ வழங்கப்படலாம்.