Home நாடு உதயகுமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் வருத்தம்

உதயகுமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் வருத்தம்

671
0
SHARE
Ad

jayathasகோலாலம்பூர், ஜூன் 6 – ஹிண்ட்ராப் நிறுவனர் பி. உதயகுமாருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்கள் தங்களின் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

உதயகுமாருக்கு நேற்று  தண்டனை வழங்கப்பட்ட அதே வேளையில், அவரது உடன் பிறந்த தம்பியும், ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான வேதமூர்த்திக்கு பிரதமர் துறையின் துணையமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது.

இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் தகவல் தொடர்புத் தலைவரான எஸ்.ஜெயதாஸ் (படம் – இடது) கூறுகையில் “ஹிண்ட்ராப்பை வழி நடத்த வந்தவருக்கு அமைச்சரவையில் இடம், ஆனால் ஹிண்ட்ராப் உருவாகக் காரணமானவருக்கு சிறை தண்டனை. இது தான் விதியின் விளையாட்டு” என்று  தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.v_s_ganapathi_rao

#TamilSchoolmychoice

மேலும் “கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற வரலாற்றுப் பேரணி உருவாகக் காரணமாக இருந்தவர் உதயகுமார். அவரைத் தவிர வேறு யாரும் அப்படி ஒரு பேரணியை உருவாக்கியிருக்க முடியாது.” என்றும் ஜெயதாஸ் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஹிண்ட்ராப் இயக்கத்தின் முன்னாள் தலைவரான வி.கணபதி ராவ் (படம் – வலது), உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து தனது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். தன்னால் அவரைப் பாதுகாக்க முடியவில்லை என்றும் கணபதிராவ் மன்னிப்பு கோரியுள்ளார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் கணபதிராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.