Home நாடு பினாங்கு இரண்டாவது பாலம் சரிவு: இடிபாடுகளில் சிக்கிய ஒருவரது உடல் மீட்பு!

பினாங்கு இரண்டாவது பாலம் சரிவு: இடிபாடுகளில் சிக்கிய ஒருவரது உடல் மீட்பு!

813
0
SHARE
Ad

Untitled-1

ஜார்ஜ் டவுன், ஜூன் 7 – பினாங்கு மாநிலம் பத்து மாவுங்கில் கட்டுமானப் பணியில் இருந்த இரண்டாவது பினாங்கு பாலத்தின் ஒரு பகுதி, நேற்று மாலை 7.00 மணியளவில் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் புதையுண்டன.

இதில் கட்டுமானப் பணியாளர்களான இந்தோனேசியாவைச் சேர்ந்த சலாமட் (வயது 36) மற்றும் மியான்மரைச் சேர்ந்த டின் மாவுங் இவின் (வயது 39 ) ஆகிய இருவர் பலத்த காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதோடு இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி தலையில் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

100 க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினரும், மீட்புக்குழுவினரும் சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கிய ஒருவரது உடல் மீட்பு

இன்று காலை முதல் மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த பச்சை நிற கெலீசா வகை காரில் இருந்த ஒருவரை மீட்கப் போராடிவந்தனர்.

இந்நிலையில் தற்போது அந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.