Home நாடு பாலத்திற்கு பெயர் சூட்டியதில் அதிருப்தியா? – லிம் மறுப்பு

பாலத்திற்கு பெயர் சூட்டியதில் அதிருப்தியா? – லிம் மறுப்பு

495
0
SHARE
Ad

Lim Guan Engபினாங்கு, மார்ச் 3 – பினாங்கு இரண்டாவது பாலத்திற்கு வைக்கப்பட்ட பெயரில் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக உத்துசானில் இன்று செய்தி வெளியிட்டிருப்பதை அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற, வான வேடிக்கைகளுடன் கூடிய திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் துன் ரசாக், அப்பாலத்திற்கு பேரரசர் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷாவின் பெயரை வைத்தார்.

ஆனால், மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் பாலத்திற்கு அப்பெயர் வைத்ததில், லிம் குவான் எங் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக, உத்துசானில் 26 ஆம் பக்கத்தில் ‘திறந்த மனதுடன் பெயரை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

எனினும், அதை முற்றிலும் மறுத்த லிம், அந்த முடிவில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், பெயர் வைப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசாங்கத்திற்கும், தனக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் தீய நோக்கத்துடன் உத்துசான் இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பதாகவும் லிம் கூறினார்.

“நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மத்திய அரசாங்கத்திற்கு அந்த உரிமை (பெயர் சூட்டும்) உள்ளது. அவர்களின் உரிமை குறித்து நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது” என்று லிம் தெரிவித்தார்.