Home நாடு பினாங்கு பாலம் கட்டுமானப் பணிக்கு தடை உத்தரவு

பினாங்கு பாலம் கட்டுமானப் பணிக்கு தடை உத்தரவு

702
0
SHARE
Ad

Untitled-1

பினாங்கு, ஜூன் 7 – பினாங்கு மாநிலத்தில் கட்டுமானப் பணியிலிருந்த இரண்டாவது பாலத்தின் ஒரு பகுதி நேற்று இரவு இடிந்து விழுந்ததால், பினாங்கு மாநில நகரசபை (MPPP) அப்பாலத்தின் கட்டுமான வேலையை உடனடியாக நிறுத்தும் படி அறிவித்துள்ளது.

பினாங்கு மாநில நகரசபை (MPPP) பொறியியல் இயக்குனர் அந்த ஆணையை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் வழங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று விபத்து நடந்த இடத்தில் பார்வையிட்டதோடு, மீட்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பாலம் இடிந்து விழுந்தது குறித்தும், மீட்புக் குழுவினரின் நடவடிக்கைகள் குறித்தும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் லிம் குறிப்பிட்டார்.

நேற்று இரவு 7 மணியளவில் நடந்த இவ்விபத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் இருவரும்,அந்த வழியாக காரில் பயணம் செய்தவர்களில் ஒருவரும்  காயமடைந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள ஒரு காரில் இருந்து ஒருவரை வெளியே கொண்டுவரும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அந்த காரில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.