Home வாழ் நலம் சத்துப் பட்டியல்: முந்திரிப் பருப்பு

சத்துப் பட்டியல்: முந்திரிப் பருப்பு

620
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 7- அதீத சுவையுடன் அதிக ஆற்றலும் தரக்கூடியது முந்திரி பருப்பு. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களும், தாது உப்புகளும் கூட இதிலுள்ளன. முந்திரிப் பருப்பின் சத்துக்களை அறிவோம்…

முந்திரி, பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளை தாயகமாகக் கொண்டது. கொஞ்சம் பசுமையும், கொஞ்சம் வெப்பமும் கொண்ட பகுதிகளில் முந்திரி நன்கு விளையும். பழத்திற்கு வெளியே விதை இருப்பது முந்திரியின் வினோதமாகும். சிறுநீரக வடிவில் தடித்த உறையுடன் முந்திரிப் பருப்புகள் சூழப்பட்டிருக்கும்.

CASHEW-NUTSமுந்திரிப்பருப்பு அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் முந்திரிப் பருப்பில் 553 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. எளிதில் ஜீரணமாகும் நார்ப் பொருட்கள் முந்திரிப்பருப்பில் உள்ளது. ஆரோக்கியத்திற்கு துணைபுரியும் துணை அமிலங்கள் பல உள்ளன.

#TamilSchoolmychoice

இவை புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றலை வழங்க வல்லவை. இதயத்திற்கு நலம் பயக்கும் ஆலியிக் அமிலம், பால்மிடோலியிக் அமிலம் ஆகியவை முந்திரியில் உள்ளது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான இவை, கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கவும், நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்புகளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் உடையது.

மேலும் இதய பாதிப்புகளில் ஒன்றான கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் ஆகியவற்றில் இருந்து தற்காப்பு தருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தாது உப்புகளின் உறைவிடமாக முந்திரிப்பருப்பை சொல்லலாம். அந்த அளவிற்கு ஏராளமான தாது உப்புகள் இதில் உள்ளன.

மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. செலீனியம் தாது, நோய் எதிர்ப்பு சுரப்பிகள் சிறப்பாக செயல்பட துணைக்காரணியாக விளங்கும். துத்தநாகமும் பல நொதிகளின் வளர்ச்சி மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு துணைக்காரணியாக செயல்படுகிறது.

மேலும் உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது. முந்திரிப் பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்கள் பல உள்ளன. வைட்டமின் பி-5, பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பைரிடாக்சின் (வைட்டமின் பி6) ரத்த சோகை மற்றும் சில வியாதிகளின் தன்மையை மட்டுப்படுத்தும். நியாசின், பெல்லாக்ரா வியாதி வராமல் காக்கும். புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திலும் இந்த வைட்டமின்கள் பங்கெடுக்கிறது.

சிறிதளவு ஸி-சாந்தின் எனப்படும் நோய் எதிர்ப்பு நிறமியும் முந்திரிப் பருப்பில் உள்ளது. இவை பார்வைத்திறனில் துணை புரியும். சருமத்தை தாக்கும் புற ஊதாக்கதிர்களை வடிகட்டும் ஆற்றலும், செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. எனவே முந்திரி பருப்பை தினமும் உண்டு நீண்டு வாழ்வோமாக…!