Home கலை உலகம் ஆஸ்கார் 2014: ‘கிராவிட்டி’ திரைப்படத்திற்கு மட்டும் 7 விருதுகள்!

ஆஸ்கார் 2014: ‘கிராவிட்டி’ திரைப்படத்திற்கு மட்டும் 7 விருதுகள்!

641
0
SHARE
Ad

Nasa-gravity-imshayலாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – உலக அளவில் மிகச் சிறந்த படங்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்காரின் 86வது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் ‘கிராவிட்டி’ திரைப்படத்திற்கு மட்டும், சிறந்த இயக்குனர், விஷுவல் எபெக்ட்ஸ், படத்தொகுப்பு, ஒலிசேர்ப்பு, ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, என விருதுகள் கிடைத்துள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு படமான  ’12 இயர்ஸ் அ ஸ்லேவ்’, சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், சிறந்த திரைக்கதைக்கான விருதை ‘ஹெர் – Her’ திரைப்படமும் மற்றும் தழுவல் திரைக்கதைக்கான விருதை  ’12 இயர்ஸ் அ ஸ்லேவ்’ திரைப்படமும் வென்றது.

இது தவிர இதர பிரிவுகளில் விருதுகள் வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:-

1.சிறந்த நடிகர் விருது

வெற்றி பெற்றவர் – மாத்யூ மெக்கொனாகே – படம் ‘டேலஸ் பையர்ஸ் க்ளப்’

2.சிறந்த நடிகை விருது

வெற்றி பெற்றவர் – கேட் பிளான்செட் – படம் ‘ப்ளூ ஜாஸ்மீன்’

3.சிறந்த துணை நடிகர் விருது

வெற்றி பெற்றவர் – ஜார்டு லெடோ- படம் ‘டேலஸ் பையர்ஸ் க்ளப்’

4.சிறந்த துணை நடிகை விருது

வெற்றி பெற்றவர் – லூபிடா நியாங் – படம் ’12 இயர்ஸ் அ ஸ்லேவ்’

5.சிறந்த ஒப்பனைக் கலைஞர் 

வெற்றி பெற்றவர்கள் – லி மற்றும் மாத்யூஸ் –  படம் ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’

6.சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 

வெற்றி பெற்றவர் – கேத்தரின் மார்ட்டின் – படம் ‘தி கிரேட் கேட்ஸ்பை’

7 . சிறந்த இயக்குநர் 

வெற்றி பெற்றவர் – அல்போன்ஸோ குவாரன் – படம் ‘கிராவிட்டி’

8.சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – ‘தி கிரேட் பியூட்டி’

9.சிறந்த ஆவணப்படம் –  ’20 பீட் பிரம் ஸ்டார்டம்’

10.சிறந்த ஆவணக் குறும்படம் – ‘தி லேடி இன் நம்பர் 6’

11. சிறந்த குறும்படம் – ஹீலியம்

12. சிறந்த திரைப்படம் – ’12 இயர்ஸ் அ ஸ்லேவ்’