Home இந்தியா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சி

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சி

606
0
SHARE
Ad

Tamil-Daily-News_30612909794புதுடில்லி, ஜூன் 7 –  பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு கோவாவில் கூடுகிறது. அப்போது அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவாவில் தொடங்கும் இந்த கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தல் எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும் தெரிகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், கூட்டணி விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க பாரதிய ஜனதா தயாராக இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடந்த பிறகே அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் நாட்டின் நிதி நிலைமை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்றும் தெரிகிறது.