Home நாடு தமிழக பேராசிரியர் மு.இளங்கோவனின் நூல் வெளியீட்டு விழா

தமிழக பேராசிரியர் மு.இளங்கோவனின் நூல் வெளியீட்டு விழா

672
0
SHARE
Ad

Elangovan-Profபெட்டாலிங் ஜெயா, ஜூன் 7 – பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணி மன்றமும், மலேசிய தமிழ்ப் பேச்சாளர் மன்றமும் இணைந்து நடத்தும் முனைவர் இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைகள் மற்றும் கட்டுரைக் களஞ்சியம் என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் பெட்டாலிங் ஜெயா நூலகத்தில் (ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலுக்கு எதிரே) நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பேராசிரியர் முனைவர் தெய்வ சுந்தரம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.