Home One Line P2 கோலாலம்பூரில், புதுவை மு.இளங்கோவனின் நூல் வெளியீடு

கோலாலம்பூரில், புதுவை மு.இளங்கோவனின் நூல் வெளியீடு

1075
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதியும் எழுத்தாளருமான முனைவர் மு.இளங்கோவன் (படம்), எழுதியிருக்கும் “தொல்லிசையும் கல்லிசையும்” என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை ஆகஸ்ட் 10-ஆம் தேதி தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில், 150, ஜாலான் சுல்தான் அப்துல் சமாட் என்ற முகவரியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு மேனாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் தலைமை வகிக்கிறார். மன்னர்மன்னன் மருதை, திருமுருகன் திருவாக்கு பீடத்தைச் சேர்ந்த பாலயோகி சுவாமிகள் ஆகியோர் சிறப்புரையாற்றவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இரா.திருமாவளவன் நூல் அறிமுக உரையை வழங்குகிறார்.

மேலும் பகாங் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ, மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், அருள் முனைவர் ஆகியோரும் வாழ்த்துரை வழங்குவர்.

#TamilSchoolmychoice

முனைவர் முரசு நெடுமாறன் வாழ்த்துக் கவிதை வழங்குவார். நிகழ்ச்சியை தங்கமணி வழி நடத்துவார்.

நிகழ்ச்சியின் நிறைவாக மு.இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இளங்கோவன் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நாட்டில் தங்கி இருப்பார்.

அவரது மலேசியத் தொடர்பு எண்: 011-23056030