Home One Line P1 காட்: சொந்த நாடாளுமன்ற தொகுதியில் ஏளனத்திற்கு ஆளான கிட் சியாங்!

காட்: சொந்த நாடாளுமன்ற தொகுதியில் ஏளனத்திற்கு ஆளான கிட் சியாங்!

1009
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

கோலாலம்பூர்: காட் பாடம் விவகாரமாக தமது சொந்த நாடாளுமன்ற தொகுதியில் பேசிக் கொண்டிருந்த ஜசெக கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இஸ்காண்டார் புத்ரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்து, அவர் உரை நிகழ்த்திய போது, அவருக்கு எதிராக “இன்னும், நீங்கள் என்ன பொய்களைக் கூறப் போகிறீர்கள்” என்று அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியின் அமைப்பாளரின் கூற்றுப்படி, லிம் அங்கு வருகைப் புரிந்திருந்த பெரும்பாலான மக்களின் ஏளனத்திற்கு ஆளானதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

லிம் கிட் சியாங்கின் நாடாளுமன்றத் தொகுதியின் சிறப்பு பிரதிநிதியான எங் சியாம் லுவாங் கூறுகையில், அங்கு வருகைப் புரிந்தவர்களிடம் காட் பற்றிய விளக்கத்தை தெளிவாக எடுத்துரைக்க லிம் சென்றிருந்ததாகத் தெரிவித்தார்.

தேசிய வகை பள்ளிகளில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேசிய மொழிப் பாடப்புத்தகங்களில் காட் பாடம் அறிமுகம் குறித்து உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.” என்று பெயர் குறிப்பிட விரும்பாத நிகழ்ச்சி ஏற்பாளார் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு ஜசெக கட்சித் தலைவர்கள் இப்பாடத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் வேளையில், லிம் கிட் சியாங் இதற்கு ஆதரவு அளித்து வருவது கட்சித் தலைவர்களிடத்திலேயே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.