Home One Line P1 உலக வல்லரசு நாடுகளுக்கு எதிரான மகாதீரின் தைரியத்தைப் பாராட்டிய ஜாகிர் நாயக்!

உலக வல்லரசு நாடுகளுக்கு எதிரான மகாதீரின் தைரியத்தைப் பாராட்டிய ஜாகிர் நாயக்!

849
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ‘இஸ்லாமோபோபியாஎன்ற தலைப்பை மையமாகக் கொண்ட ஓர் உரையில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகளை கடுமையாக எதிர்க்கும் பிரதமர் டாக்டர் மகாதீரின் தைரியத்தை பாராட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் மற்றும் மோதலைத் தூண்டியக் காரணமாக, குறிப்பாக ஈராக் மீதான தாக்குதல்கள், குறித்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக பிரதமரின் விமர்சனத்தை அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவைத் தவிர வேறு எந்த முஸ்லீம் நாட்டிற்கும் அவ்வாறு செய்ய தைரியம் இல்லைஎன்று கிளந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னாள் அமெரிக்க அதிபரி ஜார்ஜ் புஷ் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் கடந்த 2003-இல் ஈராக் மீது படையெடுக்க போலி ஆதாரங்களை பயன்படுத்தியதாக ஜாகிர் கூறினார்.

குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக அனைத்துலக மத போதகரை இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் எதிர்ப்புக் கூறிய போது, ஜாகிர் மகாதீரை பாராட்டினார்.

எவ்வாறாயினும், ஜாகிர் நாயக்கிற்கு அங்கு நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு அளிக்கப்படும் அழுத்தத்திற்கு மலேசியா அடிபணியாது என்று டாக்டர் மகாதீர் வலியுறுத்தியிருந்தார்.

ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்பக் கோரி, அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை இந்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது.