ஜூன் 8 – இந்த ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் வகுப்பில் இடம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ததில் பலருக்கு இடம் கிடைத்து அந்தப் பட்டியலும் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இருப்பினும் நடப்புஆண்டில் மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு விண்ணப்பம் செய்து இடம் கிடைக்காமல்இருக்கும் மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (10.6.2013) காலை மணி 11.30 க்கு புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகம் முன் ஓர் அமைதிக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்கை சந்திக்க ஏற்பாடுசெய்யும்படி அமைச்சர் சுப்பிரமணியத்தை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றுஇதன் ஏற்பாட்டாளர் ஆ. திருவேங்கடம் (படம்) கூறுகிறார்.
ஹிண்ட்ராப்புடன் அரசு செய்து கொண்ட 7.5% மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடுஒப்பந்தப்படி நமக்கு 2100 இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் திருவேங்கடம் கூறியுள்ளார்.
மெட்ரிக்குலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் இந்தஅமைதிப் போராட்ட நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டுமென ஏற்பாட்டாளரான அவர் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் பெற்றோர் துணையுடன் வரவேண்டும். மெட்ரிக்குலேசன் விண்ணப்பம்செய்த நகல் படிவம், SPM முடிவு நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மெரிட் புள்ளி 90 எடுத்த மாணவர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதால் இதனைக் கடுமையாக கருதுவதோடு, சென்ற ஆண்டு 1500 இடங்கள் இந்தியர்களுக்கு வழங்கப் படவில்லை என்பதற்கு நம்மிடம் ஆதாரங்கள்உள்ளன என்றும் திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதிப் போராட்ட முயற்சி வெற்றி பெற்றால் அதனால் இன்னும் பல மாணவர்கள் பயனடைவதற்கு வாய்ப்பு உண்டு.
தொடர்புக்கு ஆ.திருவேங்கடம்; கைத்தொலைபேசி: 017 6470906.