Home கலை உலகம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக விக்ரமன் வெற்றி

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக விக்ரமன் வெற்றி

629
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 10- தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்ரமன் தலைமையிலான ஒரு அணியும், நடிகரும் இயக்குனருமான விசு தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டது.

vikramanஇதில் விக்ரமன் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விக்ரமனும், செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு வி.சேகரும் போட்டியிட்டனர். துணை தலைவர் பதவிக்கு பி.வாசும், கே.எஸ்.ரவிக்குமாரும் போட்டியிட்டனர். இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, ஷண்முக சுந்தரம், ஏகம்பவாணன், பேரரசும் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக திருமலை உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

விசு தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விசுவும், செயலாளராக ஆர்.சுந்தர்ராஜன், பொருளாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. துணை தலைவராக மங்கை அரிராஜன், அரவிந்த்ராஜ் ஆகியோரும், இணை செயலாளர்களாக செய்யாறு ரவி, வி.பிரபாகர், ஜெய்பிராகஷ், கண்ணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ரவிமரியா உள்ளிட்ட 12 பேரும் போட்டியிட்டனர்.

#TamilSchoolmychoice

2700 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்திற்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் வாக்களித்தனர். மேலும் நடிகர்கள், சத்யராஜ், பார்த்திபன், எஸ்.வி.சேகர், ராமராஜன் ஆகியோரும் படம் இயக்கி உள்ளதால் அவர்களும் வாக்களித்தனர். இந்த வாக்குபதிவு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட்டன.

இதில் இயக்குனர் விக்ரமன் 716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விசு 556 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மற்ற பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.