மும்பை, ஜூன் 10- விஜய் நடித்த ‘தமிழன்’ உள்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா.
இவரது தந்தை அசோக் சோப்ரா. இந்திய ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இரு வாரங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையொட்டி பிரியங்கா சோப்ரா படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் தந்தையின் அருகில் இருந்து கவனித்து வந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 1 மணியளவில் அசோக் சோப்ரா மரணமடைந்தார்.
Comments