Home 13வது பொதுத் தேர்தல் கேமரன் மலை, செகாமட், தாப்பா, லாபிஸ் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மனு தாக்கல்?

கேமரன் மலை, செகாமட், தாப்பா, லாபிஸ் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மனு தாக்கல்?

505
0
SHARE
Ad

ge13-general-election-mlaaysiaகோலாலம்பூர், ஜூன் 13 –  தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, கேமரன் மலை, செகாமட், தாப்பா மற்றும் லாபிஸ் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த எதிர்கட்சி வேட்பாளர்கள் தங்களது தேர்தல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக மஇகா வென்ற 4 தொகுதிகளில் உலு சிலாங்கூர் தவிர்த்து மற்ற 3 தொகுதிகளின் முடிவுகளையும் எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த தேர்தல் மனுக்கள் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடங்கி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் எ.மனோகரனை, 462 வாக்குகள் வித்தியாசத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தோற்கடித்தார்.

மேலும் செகாமட் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் டத்தோ சுவா ஜூய் மெங்கை விட 1,217 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜோகூர் லாபிஸ் தொகுதியில் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தேசிய முன்னணி வேட்பாளர் சுவா டீ யோங்கிடம் 353 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அதே போல் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் வசந்தகுமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோரை விட 7,927 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றார்.

இந்த சர்ச்சைக்குரிய தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மனு தாக்கல் செய்வதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.