Home 13வது பொதுத் தேர்தல் பேராக் தேர்தல் மனுக்கள் தள்ளுபடிக்கு எதிராக பாஸ் மேல்முறையீடு!

பேராக் தேர்தல் மனுக்கள் தள்ளுபடிக்கு எதிராக பாஸ் மேல்முறையீடு!

587
0
SHARE
Ad

justiceகோலாலம்பூர், செப் 10 – பேராக் மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஸ் கட்சி மீண்டும் மேல்முறையீடு செய்யவுள்ளது.

பாஸ் கட்சியின் இணை சட்ட ஆலோசகரான கெனி ஆனந்த் வெண்ட்ராகன், தாங்கள் ரங்காப், மானோங், பாசீர் பஞ்சாங் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் வியாழக்கிழமையும், லூபோக் மெர்பாவ் மற்றும் செலாமா ஆகிய தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியும் முறையீட்டிற்கான வழக்கு மேலாண்மை நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பாஸ் அந்த தொகுதிகளில் 100 முதல் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே மேல்முறையீடு தேர்தல் முறைகேடுகள் சட்டம் 1954 பிரிவு 35 A ன் படி தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும், ஏற்கனவே பாஸ் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட அத்தனை தேர்தல் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன என்றும் ஆனந்த் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தீபகற்ப மலேசியாவில் மட்டும் 58 தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதில் பேராக் மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 11 மனுக்களும், கிளந்தானில் 9 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.