Home அரசியல் சாஹிட்,சரவணன் தேர்தல் வெற்றிகள் மீண்டும் விசாரணை! தேர்தல் நீதிமன்றத்திடம் இறுதி முடிவு!

சாஹிட்,சரவணன் தேர்தல் வெற்றிகள் மீண்டும் விசாரணை! தேர்தல் நீதிமன்றத்திடம் இறுதி முடிவு!

677
0
SHARE
Ad

ahmad zahidகோலாலம்பூர், டிச 24 – கடந்த மே 5 பொதுத்தேர்தலில், உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி (படம்) வெற்றி பெற்ற தொகுதியான பாகான் டத்தோ மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சரான டத்தோ எம்.சரவணன் வெற்றி பெற்ற தாப்பா ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளின் வெற்றி செல்லுபடியாகுமா? இல்லையா? என்பதை தேர்தல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்தலில் பாகான் டத்தோ தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட சாஹிட் ஹமிடி 2,108 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 17,176 வாக்குகளும், பக்காத்தான் வேட்பாளர் மஹ்டி ஹசானுக்கு 15,068 வாக்குகளும் கிடைத்தன.

தேர்தல் விதிமுறைகளின் படி, ஒரு வேட்பாளர் பிரச்சாரத்திற்கு 200,000  ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் மீறி, சாஹிட் 20,00000 ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்தார் என்று கூறி மஹ்டி ஹசானும், அஸ்மின் சுலைமானும் சாஹிட்டுக்கு எதிராக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறி, ஈப்போ நீதிமன்றத்தில் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

m.saravanan1-may7அதே வேளையில், பொதுத்தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சரவணன் (படம்) 7,927 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 20,670 வாக்குகளும், பக்காத்தான் வேட்பாளர் கே.வசந்தகுமாருக்கு 12,743 வாக்குகளும் கிடைத்தன.

தனது தொகுதியில் தேர்தல் மோசடிகள் நடந்துள்ளதாகவும், சரவணனின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் வசந்தகுமார் வழக்குத் தொடுத்தார்.

இந்நிலையில், இந்த இரு வழக்குகளும் நேற்று கூட்டரசு உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டு விசாரணைக்கு வந்தன. அதை விசாரித்த கூட்டரசு உயர் நீதிமன்றம், ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி உமி கல்சோம் அளித்தத் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்தது.

அத்துடன் சாஹிட் ஹமீடி மற்றும் டத்தோ எம்.சரவணன் ஆகியோரது வெற்றி செல்லுபடியாகுமா? இல்லையா? என்பதை தேர்தல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.