Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் மனு: லூபோக் மெர்பாவ் சட்டமன்ற தொகுதியை தே.மு தக்க வைத்தது!

தேர்தல் மனு: லூபோக் மெர்பாவ் சட்டமன்ற தொகுதியை தே.மு தக்க வைத்தது!

623
0
SHARE
Ad

justice

ஈப்போ, ஆகஸ்ட் 14 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலம் லூபோக் மெர்பாவ் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் மனுவை ஈப்போ தேர்தல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

தேர்தல் மனு 1954, பிரிவு 9 மற்றும் 34 ஆகிய விதிமுறைகளுக்கு இணங்க மனுதாரர் முகமட் ரிட்சுவான் ஹாசிப் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி நீதிபதி டத்தோ அப்துல் ரஹ்மான் செப்லி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார்.

#TamilSchoolmychoice

மேலும், தேர்தல் ஆணையத்திற்கும், லூபோக் மெர்பாவ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சிட்டி சல்மா மட் ஜுசாக்கிற்கும், செலவுத்தொகையாக தலா 50,000 ரிங்கிட்டை முகமட் ரிட்சுவான் தரவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில், அம்னோ வேட்பாளரான  சிட்டி சல்மா மட் ஜுசா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளரான முகமட் சைனுதீன் முகமட் யூசோப்பை விட 53 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.