சிங்கப்பூர், ஜூன் 14 – சிங்கப்பூரிலுள்ள ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் அமைந்துள்ள கடல்வாழ் உயிரின உலகில், சுறா வாழ்விடத்திற்குச் செல்லும் பார்வையாளர்கள், பாதுகாப்புத் தொட்டியில் மிதந்தபடி, பல்வேறு சிற்றினச் சுறாக்களை மிக அருகாமையில் கண்டு வியக்கலாம்.
அங்கு 200 சுறாக்கள் இருக்கின்றன. அவைகளுடன் நீந்தியபடி பாதுகாப்பாக மிக அருகில் கண்டு ரசிக்கலாம்.
இந்தப் பார்வைக்கூடம் நாளை ஜூன் 15ம் தேதி முதல் திறக்கப்படவிருக்கிறது.
ஒரு நாளைக்கு மூன்று முறை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
15 நிமிடம் சுறாக்களுடன் நீந்தி மகிழ ஒருவருக்கு தலா 88 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும்.