Home அரசியல் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கும் போட்டி தேவையில்லை

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கும் போட்டி தேவையில்லை

845
0
SHARE
Ad

Datuk Sohaimi Shahadanகோலாலம்பூர், ஜூன் 18 – அம்னோவின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டி வேண்டாம் என்று அம்னோ உச்ச மன்றம் முடிவெடுத்திருப்பதைத் தொடர்ந்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கும் போட்டி வேண்டாம் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

இது குறித்து அம்னோ பொருளாதார, தொழில்முனைவர் பிரிவுத் தலைவர் சொஹாய்மி ஷஹாடான் (படம்) கூறுகையில், “அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டி வேண்டாம் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறோம். கட்சியை ஒற்றுமையோடு வழிநடத்தும் நோக்கத்தோடு இம்முடிவை எடுத்திருக்கிறோம். தேசிய அளவிலான பல திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே தலைவர் பதவிக்கு போட்டி வைப்பதன் மூலம் கட்சி இரண்டாக உடைவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்து வரும் கைரி ஜமாலுதீன், தனது பங்களிப்பு மற்றும் கடின உழைப்பின் காரணமாக மற்ற இளம் தலைவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருந்து வருகிறார் என்றும் சொஹாய்மி பாராட்டியுள்ளார்.