Home வணிகம்/தொழில் நுட்பம் சாம்சங் நிறுவனத்தின் ‘காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ்’ விரைவில் அறிமுகம்!

சாம்சங் நிறுவனத்தின் ‘காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ்’ விரைவில் அறிமுகம்!

625
0
SHARE
Ad

samsung-galaxy-s4-artist-concept-640x353ஜூன் 19 – சாம்சங் நிறுவனம் தற்போது  ‘காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ்’ என்ற பெயரில் கைப்பேசி ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்நிறுவனத்தின் முதல் ‘வாட்டர் புரூப்’ கைப்பேசி இதுவாகும். சோனி நிறுவனத்தின் எக்ஸ்ப்ரியாவுக்கு போட்டியாகக் களம் இறங்கியுள்ளது இந்த சாம்சங் எஸ் 4 ஆக்டிவ்.

சாம்சங் எஸ் 4 ஆக்டிவின் சிறப்பு அம்சங்கள்:-

இது மற்ற சாம்சங் தயாரிப்பு கைப்பேசிகளைக் காட்டிலும் சற்று கரடு முரடான தோற்றத்துடன் உள்ளது. ஆனால் தூசு எதனையும் உள்ளே விடாது. அது மட்டுமின்றி, மூன்று அடி ஆழ நீரில் 30 நிமிடங்கள் வரை இதனை வைத்திருக்கலாம். நீர் உள்ளே புகாது. இதன் மூலம் நீருக்கடியில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த கைப்பேசி கூடுதல் வசதி அளிப்பதாகவே உள்ளது.

#TamilSchoolmychoice

சாம்சங்  காலக்ஸி எஸ் 4 ல் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த கைப்பேசியில் உள்ளன. ஆனால் ஒரு சில மாற்றங்களும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக 5 அங்குல ‘AMOLED Plus’ திரைக்குப் பதிலாக, மிகவும் தெளிவான எல்.சி.டி. திரை தரப்பட்டுள்ளது. சாம்சங் எஸ் 4 ஆக்டிவ் வெளியாகும் நாள் மற்றும் விலை குறித்த தகவல்களை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை.