Home அரசியல் தி சியூ கியோங் கட்சியிலிருந்து 3 ஆண்டுகள் இடைநீக்கம் – மசீச அறிவிப்பு

தி சியூ கியோங் கட்சியிலிருந்து 3 ஆண்டுகள் இடைநீக்கம் – மசீச அறிவிப்பு

568
0
SHARE
Ad

Tee-Siew-Kiong-370x290கோலாலம்பூர், ஜூன் 20 – அரசாங்கப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்ற கட்சியின் முடிவையும் மீறி ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் உறுப்பினராகப் பதவி ஏற்ற மசீச கட்சியின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் தி சியூ கியோங்கை, மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்வதாக மசீச கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மசீச கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில், தி சியூ கியோங்கை மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டிருப்பதாக மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார்.

மேலும் தி சியூ கியோங், 14 நாட்களுக்குள் கட்சியின் மத்திய செயற் குழுவிடம் இது தொடர்பாக முறையீடு செய்யலாம் என்றும் சொய் லெக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் மசீச பின்னடைவைச் சந்தித்ததால், அரசாங்கப் பதவிகள் எதையும் ஏற்கப்போவதில்லை என்று கட்சியின் மத்திய செயற் குழுவில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜோகூர் சுல்தானின் பேச்சை மீற முடியாத தி சியு கியோங் கட்சியின் முடிவையும் மீறி ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.