Home அரசியல் “சீனர்களைப் பிரதிநிதிக்குமாறு ஜோகூர் சுல்தான் தி சியாங்கை கேட்டுக்கொள்ளவே இல்லை” – வீ கா சியாங்

“சீனர்களைப் பிரதிநிதிக்குமாறு ஜோகூர் சுல்தான் தி சியாங்கை கேட்டுக்கொள்ளவே இல்லை” – வீ கா சியாங்

580
0
SHARE
Ad

images (5)கோலாலம்பூர், ஜூன் 22 – கட்சியின் முடிவையும் மீறி ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் பதவி ஏற்றுக் கொண்ட தி சியூ கியோங்கிற்கு, மசீச கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.காரணம் சீனர்களின் பிரதிநிதியாக இருக்குமாறு தி சியூ கியோங்கை, ஜோகூர் சுல்தான் கேட்டுக்கொள்ளவே இல்லை என்று மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் வீ கா சியாங் (படம்) நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி ஜோகூர் சுல்தானை தான் சந்தித்துப் பேசியதாகவும், அவர் சீனர்களைப் பிரதிநிதிக்கச் சொல்லி எந்த ஒரு தனி நபரையும் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் வீ கா சியாங் தெரிவித்துள்ளார்.

“ஜோகூர் ஆட்சிக் குழுவில் சீனர்களை பிரதிநிதிக்கத் தகுதியாக 3 பேர் இருந்தனர். தி சியூ கியோங் மட்டும் தனித்து இல்லை” என்றும் வீ கா சியாங் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு,”கடந்த மே மாதம் 9 ஆம் தேதி ஜோகூர் மந்திரி பெசாரிடமிருந்து தி சியூ கியோங்கிற்கு கடிதம் வந்துள்ளது. மே 10 ஆம் தேதி ஜோகூர் ஆட்சிக் குழுவில் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் மே 11 ஆம் தேதி நடந்த மசீச தலைமைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தி சியூ கியோங் அதுபற்றி கூறவே இல்லை. உண்மையில் அவர் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அப்போதே கட்சித் தலைமைக்கு தெரிவித்து, கட்சியின் முடிவு குறித்து கருத்து கேட்டிருக்க வேண்டும்” என்று வீ கா சியாங் தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்ற கட்சியின் முடிவையும் மீறி தி சியூ கியோங், ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டதால், மூன்று ஆண்டுகள் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக மசீச கட்சி தலைமை கடந்த ஜூன் 20 ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.