Home கலை உலகம் விஸ்வரூபம்-2 படத்தில் கமல் அதிரடி மாற்றங்கள்

விஸ்வரூபம்-2 படத்தில் கமல் அதிரடி மாற்றங்கள்

633
0
SHARE
Ad

Viswaroopam-2-Sliderசென்னை, ஜூன் 22 –  எதிர்வரும் தீபாவளிக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் கமல்ஹாசன் மேற்பார்வையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த படத்தில் சில அதிரடி மாற்றங்களை கமல் செய்துள்ளார்.

சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா எனமுதல் பாகத்தில்நடித்தவர்களே, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.

ஆனால், படத்தின் தயாரிப்புபொறுப்பை மட்டும், தன்னிடமிருந்து, வேறு ஒருவரிடம் கமல் விற்று விட்டார்.

மேலும், முதல் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்த சானு வர்க்கீசை நீக்கிவிட்டு, இப்போது ஷாம்தத் சைனுதீன் என்பவரை நியமித்துள்ளார்.

அதே போல், விஸ்வரூபம் படத்துக்கு மூன்று பேர் இணைந்து இசையமைத்தனர். ஆனால், இப்போதுஇரண்டாம் பாகத்துக்கு, ஜிப்ரானை ஒப்பந்தம் செய்துள்ளார்.வாகை சூடவா படத்தில் அறிமுகமான ஜிப்ரான், வத்திக்குச்சி, குட்டிப்புலி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தாய்லாந்திலும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்குள் பட வேலைகள் முடிந்து ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக விஸ்வரூபம்-2 வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.