Home நாடு “தேர்தல் ஆணையத்தை வழி நடத்த உங்களுக்குத் தகுதி இல்லை” – அன்வார்

“தேர்தல் ஆணையத்தை வழி நடத்த உங்களுக்குத் தகுதி இல்லை” – அன்வார்

381
0
SHARE
Ad

MALAYSIA-OPPOSITION-ANWAR-TRIALகோலாலம்பூர், ஜூன் 22 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எதிர்கட்சியினரின் கறுப்பு 505 பேரணி, இன்று தலைநகர் பாடாங் மெர்போக் திடலில் நடைபெற்றது.

பக்காத்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது போல், அதன் ஆதரவாளர்கள் 7 இடங்களில் ஒன்று கூடி, பாடாங் மெர்போக் திடலை நோக்கி பேரணியாகத் திரண்டு வந்தனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி,மாலை 5.30 மணியோடு எந்த வித மோதலும் இன்றி அமைதியான முறையில் நிறைவடைந்தது.

#TamilSchoolmychoice

சுமார் 30,000 பேர் இப்பேரணியில் திரண்டனர். இருப்பினும், ‘செகுபார்ட்’ என்று அழைக்கப்படும் Solidariti Anak Muda Malaysia  (SAMM) அமைப்பின் தலைவரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் தலைமையில் 100 பேர் அடங்கிய குழு இன்று இரவு பேரணி நடைபெற்ற திடலில் கூடாரம் அமைத்து தங்கவுள்ளது.

இந்நிகழ்வில் பேசிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், “இப்பேரணியில் கலந்து கொண்ட அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி கூறியதோடு, ஒத்துழைப்பு கொடுத்த காவல்துறையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

“பாடாங் மெர்போக்கில் ஒன்று கூடி பிறகு இங்கிருந்து மெர்டேக்கா மைதானம் நோக்கி பேரணி செல்வது என்று முதலில் யோசித்தோம். ஆனால் புகைமூட்டம் காரணமாக மக்களின் உடல் நலத்திற்கு கேடு ஏற்பட்டு விடும் என்று கருதி அம்முடிவைக் கைவிட்டோம்.

இருப்பினும் புகைமூட்டத்தை பற்றி கவலைப்படாமல் மக்கள், 7 இடங்களிலும் ஒன்று கூடி பாடாங் மெர்போக் நோக்கி பேரணியை மேற்கொண்டனர்” என்று அன்வார் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தலில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசூப் மற்றும் துணைத்தலைவர் வான் அகமட் வான் ஓமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்ட அன்வார், “நீங்கள் தேர்தல் ஆணையத்தை வழிநடத்த தகுதியில்லாதர்வர்கள். இந்த மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“தேர்தல் முடிவுகளை ஏன் ஏற்க மறுக்குறீர்கள் என்று இந்தோனேசிய பிரதமர் என்னிடம் வினவினார், நாங்கள் தான் போதுத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றோம் என்று கூறினேன். அவர் புரிந்து கொண்டார்” என்று அன்வார் பேரணியில் மக்கள் முன் உரையாற்றினார்.