Home கலை உலகம் எனது கனவை நனவாக்கினார் விஜய்! அமலாபால்

எனது கனவை நனவாக்கினார் விஜய்! அமலாபால்

746
0
SHARE
Ad

ஜூன் 23- இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அமலாபால், தற்போது அவர் இயக்கியுள்ள தலைவா படத்திலும் மீண்டும் நாயகியாக நடித்துள்ளார்.

Vijay-Amala-Paul-Thalaivaa-movie-unseen-latest-picsஅதுவும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் முன்னனி நடிகையாகியிருக்கிறார் அமலாபால்.

இதுபற்றி அவர் கூறுகையில், தமிழ் திரையுலகில்  கதாநாயகியாகும் ஒவ்வொரு நடிகைக்குமே நடிகர் விஜேயுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும்.

#TamilSchoolmychoice

Thalaivaa_Movie_New_Stillsaa41e91a2e9ef60183094a851afe2be4எனக்கும் அந்த கனவு இருந்தது. ஆனால், இத்தனை சீக்கிரத்தில் தலைவா படம் மூலம் அந்த வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் இந்த படம் எனது திரையுலகில் மிக முக்கியமான படமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு விஜய்யுடன் ஆடி பாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் விஜய்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அவர் நினைத்திருந்தால் வேறு எந்த நடிகையை வேண்டுமானாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், அவரது தெய்வத்திருமகள் படத்தில் நடித்தேன் என்ற ஒரே காரணத்திற்காக இந்த படத்தில் என்னை நடிக்க வைத்தார்.

ஆக, எனது திரையுலகில்  மிக முக்கியமான இயக்குனரான அவர், இனிமேல் இயக்கும் படங்களில் நடிக்க என்னை எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றார் அமலாபால்.