Home இந்தியா வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கருத்து கணிப்பு: பிரதமர் ஆகும் தகுதி ஜெயலலிதாவுக்கு அதிகம்

வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கருத்து கணிப்பு: பிரதமர் ஆகும் தகுதி ஜெயலலிதாவுக்கு அதிகம்

407
0
SHARE
Ad

சென்னை, ஜூன். 25- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடம் டாக்டர் மொய்தீன்பிச்சை இந்தியாவில் பிரதமர் ஆகும் தகுதி ஜெயலலிதா, நரேந்திர மோடி, ராகுல்காந்தி இவர்களில் யாருக்கு அதிகம் என்று கருத்து கணிப்பு நடத்தினார்.

கருத்து கணிப்பு முடிவுகளை இன்று சென்னையில் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

jeyalalithaசவுதிஅரேபியா, கத்தார், அரபுநாடுகள், ஏமன், பக்ரைன், ஆஸ்திரேலியா, குவைத், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களிடம்  மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி  மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

மொத்தம் 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 75 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்குதான் பிரதமர் ஆகும் தகுதி அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

2-வது இடத்தை நரேந்திர மோடியும், 3-வது இடத்தை ராகுல்காந்தியும் பெற்று உள்ளனர்.