Home அரசியல் “இனி எதிர்கட்சிகள் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது” – தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக...

“இனி எதிர்கட்சிகள் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது” – தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர்

448
0
SHARE
Ad

students2-300x175கோலாலம்பூர், ஜூன் 25 – எதிர்கட்சியைச் சேர்ந்த 89 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதிமொழி எடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் தேர்தல் முடிவுகள் குறித்தோ அல்லது அரசாங்கம் குறித்தோ கேள்வி எழுப்பக் கூடாது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அகமட் ஷாபெரி சீக் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் பிறகு எதிர்கட்சியினர் தங்களது தேர்தல் முடிவுகளுக்கு எதிரான ‘கறுப்பு 505’ பேரணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததையும் ஷாபெரி சீக் விமர்சித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நேற்று எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளே நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுகமாகப் பதவி ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களது அதரவாளர்கள் சாலையில் படுத்துக்கொண்டு, காவல்துறையினருக்கு எதிராக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்” என்று ஷாபெரி தெரிவித்துள்ளார்.