Home இந்தியா தூய்மையான கிராம இயக்கம் விருது: 31 ஊராட்சி தலைவர்களுக்கு ஜெயலலிதா பரிசு வழங்கினார்

தூய்மையான கிராம இயக்கம் விருது: 31 ஊராட்சி தலைவர்களுக்கு ஜெயலலிதா பரிசு வழங்கினார்

904
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 26- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டும், சுற்றுசூழல் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கிய தூய்மையான கிராம இயக்கம் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2003-ம் ஆண்டு துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், நூறு விழுக்காடு சுகாதாரத்தை எய்துகின்ற ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் மூலம் முழுமையான சுகாதார அமைப்புகள் பெற்ற கிராமங்கள் உருவாகின.

#TamilSchoolmychoice

jeyaஇந்தத் திட்டம் 2006-2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவில்லை. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் 2011-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முழுமையான சுகாதார கிராமங்களை உருவாக்குகின்ற வகையில் “தூய்மையான கிராம இயக்கம்” திட்டத்தினை செயல்படுத்திடவும், இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு தூய்மையான கிராம ஊராட்சியைத் தேர்ந்தெடுத்து, அந்த கிராம ஊராட்சிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசும், “தூய்மையான கிராம இயக்கம்” என்ற விருதும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, 2011-2012ஆம் ஆண்டுக்கான தூய்மையான கிராம இயக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம்- முடிச்சூர், திருவள்ளூர் மாவட்டம் -பாப்பரம் பாக்கம்,

கடலூர் மாவட்டம்- நாட்டார் மங்கலம், விழுப்புரம் மாவட்டம் – மொளசூர், வேலூர் மாவட்டம்- வேப்பங் குப்பம், திருவண்ணாமலை மாவட்டம் -வடமாத்தூர், சேலம் மாவட்டம் – பக்கநாடு,

நாமக்கல் மாவட்டம்- பச்சுடையாம் பாளையம், தருமபுரி மாவட்டம்- சில்லார ஹள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம்- பெண்ணேஸ்வர மடம்,

ஈரோடு மாவட்டம்- அட்டவணை அனுமன் பள்ளி, திருப்பூர் மாவட்டம்- பொங்கலூர், கோயம்புத்தூர் மாவட்டம்- கள்ளிப்பாளையம், நீலகிரி மாவட்டம் -கோடநாடு,

தஞ்சாவூர் மாவட்டம் ரெகுநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்- வடகரை, திருவாரூர் மாவட்டம்- ஆவூர், கரூர் மாவட்டம் – வாங்கல் குப்பிச்சிப்பாளையம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்- பழூர், பெரம்பலூர் மாவட்டம்- பெரியவடகரை, அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி, புதுக்கோட்டை மாவட்டம் – கொப்பனாப்பட்டி,

மதுரை மாவட்டம்- ரெங்கபாளையம், தேனி மாவட்டம் -கோவிந்தநகரம், திண்டுக்கல் மாவட்டம்- என்.பஞ்சம்பட்டி; ராமநாதபுரம் மாவட்டம்-கும்பரம், விருதுநகர் மாவட்டம் -நல்லமநாயக்கன்பட்டி, சிவகங்கை மாவட்டம்- வெற்றியூர்,

திருநெல்வேலி மாவட்டம்-நல்லூர், தூத்துக்குடி மாவட்டம் – நட்டாத்தி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம்- மாங்கோடு ஆகிய 31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், தலா 5 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினையும், தூய்மையான கிராம இயக்கம் விருதுகளையும் வழங்கி பாராட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.