Home அரசியல் கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் ரஹ்மான் மொஹ்தார் காலமானார்!

கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் ரஹ்மான் மொஹ்தார் காலமானார்!

507
0
SHARE
Ad

Dr-A-Rahman-Mokhtar-300x202பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 – திரங்கானு மாநிலம் கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. ரஹ்மான் மொஹ்தார் குடல் புற்று நோயின் காரணமாக இன்று காலை காலமானார்.

கடந்த 7 நாட்களாக திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஸகாரியா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 10.18 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

திரங்கானு மாநில ஆட்சிக் குழுவில் சுகாதாரம், குடும்பம் மற்றும் சமூக வளர்ச்சித் துறையில் பொறுப்பு வகித்து வந்த ரஹ்மானின் மறைவால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோலா பெசுட் உள்ள மஸ்ஜித் தெலுக் பாயுவில் அவரது உடல் இறுதிச் சடங்கு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ சார்பாகப் போட்டியிட்ட ரஹ்மான் மொஹ்தார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் நாப்ஸியா இஸ்மாயிலை விட 2,434 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

திரங்கானு மாநிலத்தில் போட்டியிட்ட 32 சட்டமன்ற தொகுதிகளில் 17 தொகுதிகளை தேசிய முன்னணியும், 15 தொகுதிகளை மக்கள் கூட்டணியும் வென்றது.