Home உலகம் மங்கோலியாவில் இன்று அதிபர் தேர்தல்

மங்கோலியாவில் இன்று அதிபர் தேர்தல்

559
0
SHARE
Ad

உலன் பாடூர், ஜூன் 26- மத்திய ஆசிய நாடான மங்கோலியாவின் தற்போதைய அதிபர் டசகியா எல்பெக்டோரிஜ்.

கடந்த 2009-ம் ஆண்டு அதிபரான இவரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதை அடுத்து இன்று மங்கோலியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

li07octF16_map.qxdஇந்த தேர்தலில் தற்போதைய அதிபர் உள்ளிட்ட 3 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இவர்களில் மங்கோலிய மக்கள் கட்சியின் வேட்பாளராகிய பத்மாயம்பூ பேட் எர்டேன் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். இவரைத்தவிர அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் பெண் வேட்பாளராக நட்சக் உத்வல் உள்ளார்.

#TamilSchoolmychoice

மங்கோலியாவில் இன்று அதிகாலை அதிபர் தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் 50 சதவீதம் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். வேட்பாளர்கள் எவரும் 50 சதவீத வாக்குகள் பெறவில்லை என்றால், ஜூலை 10-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போதைய அதிபருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றன.