Home நாடு குகன் மரணம்: அரசாங்கத்திற்கு எதிரான வழக்கில் குடும்பத்தினருக்குச் சாதகமாக தீர்ப்பு!

குகன் மரணம்: அரசாங்கத்திற்கு எதிரான வழக்கில் குடும்பத்தினருக்குச் சாதகமாக தீர்ப்பு!

540
0
SHARE
Ad

kuhan

கோலாலம்பூர், ஜூன் 26 – தடுப்புக் காவலில் இறந்த குகனின் மரணம் குறித்து,காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த சிவில் வழக்கில், இன்று குகனின் குடும்பத்தினருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதி மன்றம், குகனின் குடுபத்தாருக்கு நஷ்ட ஈடாக 751,700 ரிங்கிட்டும், இவ்வழக்கில் அவர்கள் செய்த செலவுகளுக்காக 50,000 ரிங்கிட்டும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தனது மகன் குகன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று கூறி, அவரது தாயார் இந்திரா நல்லதம்பி (வயது 43) கடந்த வருடம் ஜனவரி மாதம் காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக 100 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு சிவில் வழக்கு தொடுத்தார்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் (தற்போதைய தேசிய காவல்துறைத் தலைவர்), காவல்துறை அதிகாரி நவீந்திரன் விவேகானந்தன் மற்றும் சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஸைனால் ராஷித் அபு பக்கர் ஆகியோர் தான் தனது மகனின் இறப்பிற்குக் காரணமானவர்கள் என்றும், அதற்கு காவல்துறையும், அரசாங்கமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வழக்குப் பதிவு செய்திருந்தார்.