Home உலகம் மீண்டும் மங்கோலியா அதிபரானார் எல்பெக்டோர்ஜ்

மீண்டும் மங்கோலியா அதிபரானார் எல்பெக்டோர்ஜ்

518
0
SHARE
Ad

உலன் பேடர், ஜூன் 29-  மங்கோலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக அதிபரானார் டசாகியா எல்பெக்டோர்ஜ்.

mongolia 1மத்திய ஆசிய நாடான மங்கோலியாவின் தற்போதைய அதிபர் டசாகியா எல்பெக்டோர்ஜ் (படம்).

கடந்த 2009-ஆம் ஆண்டு அதிபரான இவருடைய பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து மங்கோலியாவில் அதிபர் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்தத் தேர்தலில் தற்போதைய டசாகியா உள்ளிட்ட 3 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 50.23 சதவீத வாக்குகளைப் பெற்ற டசாகியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மங்கோலிய மக்கள் கட்சியின் வேட்பாளரும் மல்யுத்த வீரருமான பத்மான்யாம்பூ பாட்-எர்டேன் 41.97 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இன்னொருவரும் மங்கோலியாவின் முதல் பெண் வேட்பாளருமான நத்சாக் உத்வல் 6.5 சதவீத வாக்குகளையே பெற்றார்.