Home கலை உலகம் எனக்கு குழந்தை தான் முக்கியம்: ஐஸ்வர்யா ராய்

எனக்கு குழந்தை தான் முக்கியம்: ஐஸ்வர்யா ராய்

695
0
SHARE
Ad

ஜூன் 29- எனக்கு என் குழந்தை தான் முக்கியம், அதற்கு பிறகு தான் நடிப்பு, பணம் எல்லாமே என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

arathayaபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு, நீண்ட இடைவேளைக்கு பின் குழந்தை பெற்று கொண்டார்.

இதன் பின் நடிக்க வந்து விடுவார் என அனைவரும் நினைத்தனர்.

#TamilSchoolmychoice

Aishwarya-Rai-Baby-Aaradhya-recent-Photosஆனால் அவரோ, எப்போதும் தன் மகள் ஆராத்யாவுடன் உடனே இருக்கிறாராம்.

சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்ற அவர், தன் குழந்தை ஆரத்யாவையும் உடன் அழைத்து சென்றார்.

அங்கு பத்திரிகையாளர்கள், எங்கு சென்றாலும் குழந்தையுடன் செல்கிறீர்களே ஏன்? என்ன காரணம்? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, திருமணத்துக்கு முன்பும், பின்பும் நான் சுதந்திரமாக இருந்திருக்கலாம்.

ஆனால் ஒரு குழந்தைக்கு தாயான பின் எனக்கான கடமை அதிகரித்து இருக்கிறது.

இப்போதைக்கு எனக்கு குழந்தை தான் முக்கியம், நடிப்பு, பணம் எல்லாம் அதற்கு பிறகு தான்.

அதனால் தான் எங்கு சென்றாலும், குழந்தையையும் கூட்டிச் செல்கிறேன் என்று பதிலளித்தாராம்.