Home அரசியல் தொழில்அதிபரைத் தாக்கிய வழக்கு: சாஹிட்டின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

தொழில்அதிபரைத் தாக்கிய வழக்கு: சாஹிட்டின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

556
0
SHARE
Ad

Zahid-Hamidi1கோலாலம்பூர், ஜூன் 27 – தொழில் அதிபர் அமீர் பஜ்லி அப்துல்லா தன் மீது தொடுத்துள்ள சிவில் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவுஸ் ஷரீப் தலைமையில் ஐவர் அடங்கிய குழு, சாஹிட்டின் மனுவை ஆராய்ந்தது.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில சட்ட விவரங்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், எனவே இவ்வழக்கு மீதான விசாரணை ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

#TamilSchoolmychoice

இதனால் இவ்வழக்கு தொடர்பான விசாரணை, வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.