Home இந்தியா உத்தரகாண்டில் பலியான தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

உத்தரகாண்டில் பலியான தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

473
0
SHARE
Ad

சென்னை, ஜுன் 27- முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

jeyalalithaஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலங்களுக்குச் சென்று யாத்திரிகர்களை மீட்பதற்காக குப்தகாசி, கேதார்நாத் ஆகிய இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று கவுரிகுண்ட் என்ற இடத்தில் 25.06.2013 அன்று விபத்துக்குள்ளாகியதில் மதுரை மாவட்டம், டி.வி.எஸ். நகர், மீனாட்சி தெருவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி பிரவீண் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த ஹெலிகாப்டர் விமானி பிரவீண் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

இந்த விபத்தில் உயிரிழந்த பிரவீண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.