Home கலை உலகம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படமாகிறது

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படமாகிறது

619
0
SHARE
Ad

ஜூன் 28- நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் வெளியான ‘பனித்துளி’ என்ற படத்தை இயக்கியவர் நட்டிகுமார். இவர் அடுத்து இந்திராகாந்தியின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.

indira-gandhiஇதுகுறித்து அவர் கூறும்போது, இந்திரா காந்தியின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவாக இருந்தது.

இது இப்போது நினைவாகப் போகிறது. இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக்கிக் கொண்டிருக்கிறேன்.

#TamilSchoolmychoice

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. படத்தின் தலைப்பை ‘அயர்ன் லேடி இந்திராகாந்தி’ என்று வைக்கலாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டா பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன். காலம் கனியும்போது எல்லாமே நன்றாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.