Home வாழ் நலம் சத்துப்பட்டியல் : இஞ்சி

சத்துப்பட்டியல் : இஞ்சி

608
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 28- இஞ்சி மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இஞ்சிச் செடியின் வேர்ப் பகுதியே நம்மால் இஞ்சி என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இஞ்சி, இந்தியா, சீனாவில் மட் டுமே மிகுதியாக மருந்துப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

gingerஉடலுக்கு அத்தியாவசியமான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் உள்ளன. குறைந்த ஆற்றல் வழங்கக் கூடியது இஞ்சி. 100 கிராம் இஞ்சி, 80 கலோரி ஆற்றலைத் தருகிறது. இஞ்சியில் கெட்ட கொழுப்புகள் கிடையாது. இஞ்சி, பழங்காலம் முதலே மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எரிச்சல், கடும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. நுண்கிருமிகளிடம் இருந்து நோய் எதிர்ப்பாற்றலை வழங்கவல்லது. இஞ்சியின் நோய் எதிர்ப்பாற்றலை அளவிட்ட விஞ்ஞானிகள், 100 கிராம் இஞ்சி, 14 ஆயிரத்து 840 மைக்ரோ மூலக்கூறுகள் டி.இ. அளவு நோய் எதிர்ப்பாற்றல் கொண்டது என்று கூறி உள்ளனர்.

#TamilSchoolmychoice

உடலுக்கு நன்மை பயக்கும் எண்ணெய்ச் சத்து இஞ்சியில் மிகுதியாக உள்ளது. ஜிஞ்சரால், ஜிஞ்சரோன், சோகால், பார்னீசின், பீட்டா பெல்லாட்ரின், சினால், சிட்ரல் போன்றவை குறிப்பிடத்தக்க எண்ணெய்ப் பொருட்களாகும். ஜிஞ்சரால் உடல் எரிச்சலையும், வலியையும் குறைக்கும் எண்ணெய்ப் பொருளாகும்.

நரம்பு பாதிப் புகள் மற்றும் காய்ச்சலில் கூட நோவு தணிக்கும் பொருளாக பயன்படுகிறது. கடும் மலச்சிக்கல், கடும் தலைவலி, பிரசவ வலி ஆகியவற்றிலும் வலி நிவாரணம் தருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இஞ்சி, எரிச்சல் கொண்டதாக இருப்பதற்கு ஜிஞ்ச ரோன் எனும் வேதிப்பொருள் காரணமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அத்தியாவசிய வைட்டமின்களான, வைட்டமின் பி-5, பி-6 ஆகியவை இஞ்சியில் உள்ளன.

மலேசியாவில் பெரும்பாலானோர்  இஞ்சி சாற்றை தேநீரில் கலந்து அருந்துகின்றனர். இதனை அன்றாட உணவு தயாரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.