கோலாலம்பூர், ஜூலை 1 – பகாங் மாநில மஇகா தொடர்புக் குழுவின் தலைவராக ஆர்.குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் நேற்று அறிவித்தார்.
பகாங் மாநில மஇகா நடப்பு துணைத் தலைவரான குணசேகரன், மாநில மஇகா தலைவர் டத்தோ எம். தேவேந்திரனுக்குப் பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிதாக பதவி ஏற்றுள்ள குணசேகரனுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், மாநிலம் முழுவதும் சென்று கட்சியின் கிளைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும்.அடிமட்டம் வரையில் சென்று மக்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பகாங் மாநில மஇகா விற்குத் தலைமை ஏற்று, இதுநாள் வரை சிறப்பாக சேவை ஆற்றி வந்த டத்தோ எம். தேவேந்திரனுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.