Home இந்தியா திருவாரூர்-நாகையில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்

திருவாரூர்-நாகையில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்

542
0
SHARE
Ad

திருவாரூர்,ஜுலை 1- தி.மு.க. தலைவரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி வருகிற 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 5-ந் தேதி இரவு 11.15 மணிக்கு சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்படுகிறார்.

karunanithiஅவர், மறுநாள் 6ந் தேதி காலை திருவாரூர் வருகிறார். அங்கு அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள அவருடைய அக்கா வீட்டில் தங்கி ஓய்வெடுக்கும் கருணாநிதி, பின்னர் மாலை 6 மணி அளவில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

#TamilSchoolmychoice

இரவு திருவாரூரில் தங்குகிறார். மறுநாள் 7-ந் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவருடைய தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு செல்கிறார். அங்கு தாயார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் திருவாரூரில் உள்ள அக்கா வீட்டிற்கு திரும்புகிறார்.

8-ந் தேதி காலை காரில் நாகப்பட்டினம் புறப்படும் கருணாநிதி அங்கு தி.மு.க. சார்பில் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் திருவாரூர் திரும்புகிறார்.

அன்று இரவு காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். இந்த தகவல்களை திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தெரிவித்தார்.