Home 13வது பொதுத் தேர்தல் “கோல பெசுட் தொகுதியில் பாஸ் வென்றாலும், தே.மு ஆட்சி தொடரும்” – அகமட் மஸ்லான் கருத்து

“கோல பெசுட் தொகுதியில் பாஸ் வென்றாலும், தே.மு ஆட்சி தொடரும்” – அகமட் மஸ்லான் கருத்து

1164
0
SHARE
Ad

Ahmad-Maslan-UMNO-Sliderதிரங்கானு, ஜூலை 1 – திரங்கானு மாநிலம் கோல பெசுட் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், எந்த வகையிலும் அம்மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தை பாதிக்காது என்று அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை எதிர்கட்சியினர் அத்தொகுதியில் வெற்றி பெற்று, இரு அணியினரும் 16 – 16 என்ற சமமான தொகுதிகளை பெறும் பட்சத்தில், மாநில சபாநாயகர் முகமட் ஸூபிர் எம்போங்கையும் சேர்த்தால் தேசிய முன்னணி 17, மக்கள் கூட்டணி 16 என்றாகிவிடும். எனவே தேசிய முன்னணி தொடர்ந்து திரங்கானுவில் ஆட்சி செய்யும் என்றும் மஸ்லான் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில்,  திரங்கானு மாநிலத்தில் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் 17 தொகுதிகளை தேசிய முன்னணியும், 15 தொகுதிகளை மக்கள் கூட்டணியும் வென்றது.

#TamilSchoolmychoice

அம்னோ சார்பாக கோல பெசுட் தொகுதியில் போட்டியிட்ட ரஹ்மான் மொஹ்தார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் நாப்ஸியா இஸ்மாயிலை விட 2,434 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஹ்மான் மொஹ்தார் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இதனால் கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோல பெசுட் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடத் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அத்தொகுதி அம்னோ பிரிவு, பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடம் சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து அத்தொகுதி அம்னோ தலைவர் இட்ரிஸ் ஜூஸோ கூறுகையில், “இடைத்தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்க அம்னோவில் நிறைய தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவரை பிரதமர் நஜிப் தேர்வு செய்வார்” என்று கூறியுள்ளார்.