Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் ஆணையம் 400 மில்லியன் செலவு செய்ததது ஏன் ? – அந்தோணி லோக் கேள்வி

தேர்தல் ஆணையம் 400 மில்லியன் செலவு செய்ததது ஏன் ? – அந்தோணி லோக் கேள்வி

671
0
SHARE
Ad

Anthony Loke 02கோலாலம்பூர், ஜூலை 1 – கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செய்த 200 மில்லியன் செலவை விட இரண்டு மடங்கு கூடுதலாக, 13 வது பொதுத்தேர்தலில்  400 மில்லியன் செலவு செய்தது ஏன் என்று அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த 5 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது ஆனால் தேர்தல் செலவோ 100 விழுக்காடு அதிகரித்துள்ளது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான செலவுத் தொகையை கணக்கிட்டால், ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 1.8 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இது மிக அதிகம் என்று அந்தோனி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டியதால் தான் அதிக செலவு ஆனது என்று தேர்தல் ஆணையம் இதற்குக் காரணம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்தோணி கூறியுள்ளார்.